ஜல்லிக்கட்டு

 ஜல்லிக்கட்டு என்றாலே அனைவருக்கும் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் தான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு ஆண்டும் மாட்டுபொங்கலுக்கு மறுநாள் நடக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமானோர் கூடுவார்கள். 

வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருவார்கள். வாடிவாசல் வழியே காளையை அவிழ்த்து விடுவார்கள். கூடிய நிற்கும் மாடுபிடி வீரர்கள் அந்த காளையின் திமிலை அடக்கி வெற்றி காண்பார்கள். 

காளையை அடக்கிவிட்டால் அதை அடக்கிய வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளி காசு, பீரோ, கட்டில், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் கிடைக்கும். காளை மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் தப்பிச்சென்றுவிட்டால் காளையை வளர்த்த உரிமையாளர்கள் பரிசினை பெறுவார்கள். 

காளையை அடக்கும் போது தங்களுக்கு ஏற்படும் காயங்களை மாடுபிடி வீரர்கள் வீரத்தின் அடையாளமாக ஏற்றுக்கொள்வார்கள். பார்வையாளர்கள் அதை பார்த்து மெய்சிலிர்த்து போவார்கள். ஜல்லிக்கட்டு போன்று தமிழர்களின் வீர விளையாட்டாக இருப்பது, மஞ்சுவிரட்டு.

தமிழ்நாட்டில் ஜல்லிகட்டுக்கு மிகவும் பிரபலமான ஊர் அலங்காநல்லூர் 

Post a Comment

0 Comments